பங்காரு அடிகளாரின் வழிகாட்டுதலின்படி செவ்வாடை பக்தர்களின் உலக புவி தின கொண்டாட்டம்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், ஆரம்பகாலம் தொட்டே இயற்கையை வணங்கி, பாதுகாத்து போற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். கடந்த 1988ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இயற்கை வள மேம்பாட்டு மாநாடு நடத்தினார். ஆன்மிக வழிபாட்டு முறையில் ஆரம்ப காலம் முதல் பஞ்ச பூத வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்தி செயல்படுத்துகிறார். இந்நிலையில், உலக புவி தினத்தை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள செவ்வாடை பக்தர்கள் பூமியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என பங்காரு அடிகளார் அறிவித்தார்.

அதன்பேரில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அமெரிக்கா, கனடா, மலேசியா, பிரான்ஸ், ஸ்ரீலங்கா, சுவிஸ் ஆகிய வெளிநாடுகளில் உள்ள செவ்வாடை பக்தர்கள், அவரவர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், அதற்கான நீர் பாசன ஏற்பாடுகளை செய்து பராமரிப்பு செய்தல், நீர்நிலைகளை தூய்மை செய்தல், மருத்துவமனை, பள்ளி வளாகம்  தூய்மை செய்தல், கோயில் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனர். இப்பணி, கடந்த 23ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கி 24ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை உலகெங்கும் உள்ள செவ்வாடை பக்தர்களால் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில், உலகெங்கும் உள்ள ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர்களும், செவ்வாடை பக்தர்களும் செய்தனர்.

Related Stories: