அன்னை தெரேசா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அன்னை தெரேசா கலை கல்லூரியில் 21ம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கல்லூரி தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான வீ.தமிழ்மணி தலைமையில் நடந்தது. திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு, துணை தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன், கல்லூரி முதல்வர் கமலக்கண்ணன், துணை முதல்வர் கீதா, கல்லூரி செயலாளர் கந்தசாமி, வேதியியல் துறை தலைவர் தீப்தி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கல்பாக்கம் அணுமின் நிலைய பொது சேவை அமைப்பு துறை தலைவர் வனஜா நாகராஜ் கலந்து கொண்டு 358 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

Related Stories: