ஈசூர் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட 100வது நாள் விழா

மதுராந்தகம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இதைதொடர்ந்து, மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சி ஈசூர் கிராமத்தில், இல்லம் தேடி கல்வி திட்டத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அப்பகுதி பட்டதாரி பெண்கள் மூலம் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகள் தொடர்ந்து 100வது நாளை நிறைவடைந்ததையொட்டி, அதனை கொண்டாடும் விதமாக ஈசூர் அரசு நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி 100வது நாள் நிகழ்ச்சி நடந்தது.  

கிராமத்தில் 6 பட்டதாரி பெண்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு, வகுப்புகள் நடத்தி, கல்வி கற்க செய்தனர். இந்த ஆசிரியர்களை பாராட்டும் விதமாக ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், ஊக்க பரிசாக மாதம் ரூ.500 வழங்குகிறார். மேலும், இந்நிகழ்ச்சியை ஒட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேதகிரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். இதில் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலமாக பயன் பெறும் பள்ளி மாணவர்களின் வில்லு பாட்டு, நடனம், நாடகம் உள்பட பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Related Stories: