ஆரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

கும்மிடிப்பூண்டி: ஆரணி ஆற்றில்  மூழ்கி சிறுவன் பரிதாபமாக பலியானான். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணியை சேர்ந்தவன் திவாகர்(15), அதேபகுதி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்தான். நேற்று பள்ளி முடிந்து 4 நண்பர்களுடன் ஏ.என்.குப்பம் அருகே உள்ள ஆரணி ஆற்றில் குளிக்கச்சென்றான். அப்போது திடீரென திவாகர் நீரில் மூழ்கி மாயமானான். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணிநேரம் போராடி சிறுவனின் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் புகாரின்படி கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: