அண்ணா மறுமலர்ச்சி திட்ட வளர்ச்சி பணிகள் தேர்வு அதிகாரி ஆய்வு

பள்ளிப்பட்டு: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் தேர்வினை மாவட்ட செயற்பொறியாளர் ஆய்வு செய்தார். அம்மையார்குப்பம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயற்பொறியாளர் ராஜவேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சுப்பிரமணியர் குளம் தூர்வாரி சீரமைக்கவும், தெரு சாலைகள் அமைக்க தேர்வு செய்யப்பட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஊராட்சியில் நாட்டு பண்ணை திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் பல்வேறு பகுதிகளில் நட்டு வளர்க்க ஏதுவாக ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஒன்றிய பொறியாளர் சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன், துணை தலைவர் ஜெயந்தி சண்முகம், வார்டு உறுப்பினர்கள் தேவி மணிமாறன், நாகலிங்கம், கவிக்குமார், ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் உடனிருந்தனர்.

Related Stories: