×

பன்பாக்கம் அரசு பள்ளியில் புவி வெப்பமாதல் கண்காட்சி

கும்மிடிப்பூண்டி: பன்பாக்கம் அரசு பள்ளியில் புவி வெப்பமாதல் குறித்த கண்காட்சி நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள மாணவர்களுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இன்குலூசிவ் அண்டு டெவெலப்மெண்ட் நிறுவனத்தின் மேலாளர் ஜெய்சிங், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. பன்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். ரெடிங்டன் மேலாளர் அசோக், ஊராட்சி மன்ற துணை தலைவர் சாந்தி, ஊராட்சி செயலர் சுகுமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் கண்ணன், முத்துகுமார், பிரதீவ்ராஜ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் கோமலா வரவேற்றார். இதில் கலந்துகொண்ட ரெடிங்டன் ஆலை மேலாளர் ரத்தின மணிவண்ணன் கண்காட்சியை திறந்துவைத்தார். இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் புவி வெப்பமடைதல், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டினை எப்படி தடுத்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகளை காட்சிப்படுத்தியதுடன் எடுத்துரைத்தனர். பின்னர் மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : Global Warming Exhibition ,Panbakkam Government School , Global Warming Exhibition at Panbakkam Government School
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...