தச்சூர்-சித்தூர் வழிச்சாலை திட்டத்துக்கு; நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தபால் அனுப்பும் போராட்டம்

பள்ளிப்பட்டு: தச்சூர், சித்தூர் கூட்டுச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், தபால் அனுப்பும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு மார்க்கத்தில் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சாலை அமைப்பதற்கு நிலம் கொடுக்க விவசாயிகள் மறுத்து வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மட்டுமே  இந்த  திட்டத்தால் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருமானம் இழக்கும் சூழ்நிலை நிலவுகின்றது.

இந்தநிலையில், மேற்கண்ட பகுதியில் சாலை அமைக்க நிலம் தேவைப்படுவதால் இன்னும் 15 நாள் அவகாசம்  வழங்கப்படுகிறது. அதற்குள் நிலத்தை வழங்கிட வேண்டும் என்று விவசாயிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட நிலம் கையப்படுத்தல் தனி அலுவலர் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே அரசின்  மனுவிற்கு பதில் தரும் வகையில் விவசாயிகள் பள்ளிப்பட்டு தலைமை தபால் நிலையத்திற்கு வந்து  நிலம் வழங்க மனுப்பு தெரிவித்து  நிலம் கையப்படுத்தும் தனி அலுவலருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

Related Stories: