×

ரம்ஜான் கொண்டாட்டம்; ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று புனித ரம்ஜான் பண்டிகையை கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துச் செய்தியில், ‘ரமலான் மாதத்தின் முடிவில் கொண்டாடப்படுகிறது ஈகைப் பெருநாள். இப்பண்டிகையைக்கு ஏழைகளுக்கு உணவும், உணவு தானியமும் தானமாக வழங்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை நல்லிணக்கத்தையும், அமைதியும், வளமும் நிறைந்த சமூகத்தையும் ஊக்குவிக்கிறது.

இந்நாளில் நாம் அனைவரும் மனிதகுல சேவைக்காக நம்மை அர்ப்பணிப்போம். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் பாடுபடுவோம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரம்ஜான் நல்வாழ்த்துகள். இந்த புனிதமான தருணம் சமூகத்தில் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் தழைத்தோங்கச் செய்யட்டும். அனைவரையும் ஆரோக்கியமும், வளமும் சூழட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Ramadan ,President , Ramadan celebration; Congratulations to the President and the Prime Minister
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து