வழக்கில் கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும்...இரவில் விசாரணை நடத்த கூடாது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: கடந்த சில நாட்களாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் மரணமடைந்த சம்பவம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு விக்னேஷ் என்பவரை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது உயரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விசரணையானது நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் மூன்று காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் என்ற நபர் இரவு கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதிகாலை அயனாவரத்தில் அந்த விசாரணை கைதியை தொடர்ந்து விசாரிக்கும்போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல திருவண்ணாமலையில் சாராய விற்பனை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள் இது போன்று உயிரிழந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்து கொண்டே இருந்தது. இதனை தடுக்கும் விதமாகா தமிழக டி.ஜி.பி. சுற்றைக்கை ஒன்றை தமிழகம் முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த சுற்றைக்கையில் குறிப்பாக இரவு நேரங்களில் விசாரணை கூடாது என்ற ஒரு உத்தரவு அவர் பிறப்பித்ததுள்ளார். பெரும்பாலும் குற்றவாளிகளை கைது செய்யும் போது, அவர்களை மாலைக்குள்ளாக சிறையில் அடைக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது போன்ற வழக்குகள் மீண்டும் வராமல் இருக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற விவகாரங்களில் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தமிழக காவல்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: