×

ஒன்றிய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமனம்.!

புதுடெல்லி: ஒன்றிய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொறுப்பேற்கும் நாள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு இமாச்சலப்பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான தருண் கபூர் பெட்ரோலியத்துறை செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்றார்.

இதற்கு முன்பு பல்வேறு பதவிகளை வகித்த தருண் கபூர், தற்போது பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படும் தருண் கபூருக்கு, ஒன்றிய அரசுத் துறை செயலாளருக்கு இணையான அந்தஸ்து மற்றும் சம்பளம் வழங்கப்படும். அதேபோல், ஹரி ரஞ்சன் ராவ் மற்றும் ஆதிஷ் சந்திரா ஆகியோர் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பல உயர்மட்ட அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற விவகார அமைச்சக செயலாளராக உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி கியானேஷ்குமார், கூட்டுறவு அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அமைச்சரவை செயலகத்தின் செயலாளராக இருந்த அகிலேஷ்குமார் ஷர்மா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அகிலேஷ்குமார் சர்மாவின் இடத்தில் அமைச்சரவை செயலாளராக, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளராக இருந்த பிரதீப்குமார் திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Former ,Union ,Petroleum ,Tarun Kapoor ,Narendra Modi , Former Union Petroleum Secretary Tarun Kapoor has been appointed as an advisor to Prime Minister Narendra Modi.
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...