×

மதுரை மருத்துவ கல்லூரி சமஸ்கிருத உறுதி மொழி விவகாரம்: மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு நேரில் விசாரணை

மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருத உறுதி மொழி ஏற்றது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சூழலில் மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 30-ம் தேதி முதலாம்ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழும்பிய நிலையில் மருத்துவக்கல்லூரியில் முதல்வர் ரத்தினவேல் தற்போது அந்த முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணை முதல்வர் தனலட்சுமி தற்போது அந்த பொறுப்பை கூடுதலாக பார்த்து வருகிறார். இந்த உறுதி மொழி எப்படி வாசிக்கப்பட்டது என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து கிளம்பியவண்ணம் இருந்தது.

வழக்கமாகா இருக்க கூடிய HIPPOCRATIC உறுதி மொழிக்கு பதிலாக எப்படி மாணவர்கள் சமஸ்கிருத உறுதியை வசித்தார்கள், அதனை யார் அனுமதித்தது என்ற சர்ச்சை ஏற்கனவே கிளம்பி இருந்தது. இது தொடர்பாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி பேரவையின் மாணவர்கள் நேற்று விளக்கமளித்திருந்தனர்.

அதில் மாணவர்கள் நேரடியா சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுக்கவில்லை. சமஸ்கிருதத்தில் இருந்த உறுதி மொழியை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டே உறுதி மொழி எடுக்கப்பட்டதாகவும், இதற்கும் மருத்துவக்கல்லூரி முதல்வரருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏற்கனவே தேசிய மருத்துக்கல்லூரி ஆணையம் தெரிவித்துள்ள அந்த உறுதிமொழியானதே எடுக்கப்பட்டது என மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொர்பாக ஏற்கனவே மருத்துவகல்லூரி இயக்குனர் முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படியில் மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவ பேரவையின் மாணவர்கள், துணை முதல்வர் தனலட்சுமி, மாணவர் அமைப்பு தலைவர் ஜோதிஸ் குமாரவேலு ஆகியோரிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tags : Madurai Medical College ,Education ,Narayanababu , Madurai Medical College, Sanskrit affirmative language, Director of Medical Education, Inquiry
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...