ஊத்துக்கோட்டை அருகே தனியாருக்கு சொந்தமான உரக்கடையின் மேற்கூரையை உடைத்து ரூ. 2லட்சம் திருட்டு: போலீஸ் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் தேன்கனி என்பவர் நடத்திவரும் உரக்கடையில் மேற்கூரையை  உடைத்து கல்லாப் பெட்டியில் இருந்த விற்பனை பணம் ரூ. 2லட்சத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: