தமிழகத்தில் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்: அனைத்து மண்டல தலைமை பெரியாளர்களுக்கும் மின்சார வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க அனைத்து மண்டல தலைமை பெரியாளர்களுக்கும் மின்சார வாரியம் சுற்றைக்கை விடுத்துள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வின் போது தேர்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என அந்த சுற்றைக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 5-ம் தேதி முதல் தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் மின்சார வாரியம் இந்த சுற்றைக்கை மூலமாக எண்ணென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளது. இதே போல் மின்தடை ஏற்பட கூடிய பட்சத்தில் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்திருக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக அங்குள்ள பொறியாளர்கள் உரிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என மின்சாரவாரியம் விடுத்துள்ள சுற்றைக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வுமையங்களில் மின்சாரவாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். மின்தடை ஏற்பட ஏதாவது சாத்தியகூறுகள் இருந்தால் அதனை முன் கூட்டியே சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மின்சாரவாரிய பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றிகளை ஆய்வு செய்யவும், பழுதடைந்திருந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்யவும் மின்சாரவாரியம் வலியுறுத்தியுள்ளது. தற்போது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டாலும் அதனை உடனடியாக சரிசெய்யகூடிய நடவடிக்கைகளை மின்சாரவாரியம் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தேர்வு நேரம் என்பதால் தேர்வு மையங்களில் எவ்விதமான மின்தடையும் ஏற்பட்டுவிட கூடாது.

அதற்காக முன்கூட்டியே ஆய்வுகளை மேற்கொள்ளவதோடு தடை ஏற்படும் பட்சத்தில் அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்யவதற்கான அனைத்து விதமான அறிவுறுத்தல் களையும் அங்குள்ள பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சரவாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வு முடியும் வரையில் அங்குள்ள மையங்களில் எந்த விதமான மின் தடையேயும் ஏற்படாததை முழுமையாக உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் மின்சாரவாரியம் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: