இடி, மின்னலுடன் நள்ளிரவில் திடீர் மழை: காஞ்சி மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: கோடை வெயில் சுட்டெரித்து வந்த வேளையில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை காலம் தொடங்கி, தமிழகத்திலேயே அதிக அளவாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 111 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை தொடர்ந்து வந்ததால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், திடீரென இடி மின்னலுடன் யாரும் எதிர்பாராத வகையில் கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, தாமல், பாலுசெட்டிசத்திரம், கீழ்அம்பி, சிறுகாவேரிபாக்கம், வெள்ளைகேட் ஆகிய பகுதிகளில் மழைநீர், சாலையில் வெள்ளமாக ஓடியது. திடீர் மழையால், சாலையில் மழை நீர் தேங்கி, கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் நிம்மதியாக மகிழ்ச்சியுடன் தூங்கினார்கள்.

Related Stories: