×

தரை இறங்கும் சமயத்தில் நடுவானில் விமானம் குலுங்கியதால் பதற்றம்: 15 பயணிகள் படுகாயம்

புதுடெல்லி: மும்பையில் இருந்து துர்காபூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதில்  15 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் இருந்து துர்காபூருக்கு  நேற்றுமுன்தினம் ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்றது. துர்காபூர் அருகே வந்ததும் விமானம் தரையிறங்குவதற்கு ஏதுவாக தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அப்போது விமானம் பயங்கரமாக குலுங்கியதால் (ஏர் - டர்பியுலன்ஸ்) பயணிகள் அலறினர். சிலர் இருக்கைகளில் இருந்து கீழே விழுந்தனர்.

இச்சம்பவத்தில் 12 பயணிகள் மற்றும் 3 விமானப் பணியாளர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.  சிறிது நேரத்திலேயே விமானம் துர்காபூரில் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து, காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விமானம் குலுங்கும் போது உள்ளிருந்த பயணிகளின் கேமராவில் எடுக்கப்பட்ட பரபரப்புக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  பயணிகளின் உடைமைகள் விமானத்தில் சிதறிக் கிடப்பது அந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் வெளியிட்ட அறிக்கையில், ‘ஸ்பைஸ் ஜெட் போயிங் பி737 ரக விமானம்  மும்பையில் இருந்து துர்காபூருக்கு சென்றது. எதிர்பாராத விதமாக விமானம் ஏர் டர்பியூலன்ஸில் சிக்கியது. இதில் சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tension as plane crashes midway during landing: 15 passengers injured
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...