×

வெள்ளிப்பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த மாதம் நடந்த 12வது தேசிய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதி ஆட்டத்தில் கலந்துகொண்டு, “வெள்ளிப் பதக்கம்” வென்ற தமிழ்நாடு ஹாக்கி வீரர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. உடனிருந்தனர்.



Tags : CM ,Stalin , Silver medalist hockey players meet and congratulate Chief Minister MK Stalin
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...