×

உலக செஸ் ஒலிம்பியாட் இந்திய அணி அறிவிப்பு

சென்னை: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள 20 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக  நடைபெற உள்ள இந்த தொடரில் (மாமல்லபுரம், ஜூலை 28 - ஆக.10), சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா,  அந்நாட்டுக்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அணி உலக செஸ் ஒலிம்பியாட்டில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக 2020ல் இணையம் வழியாக நடந்த 43வது செஸ் ஒலிம்பியாட்டில்  இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 20 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கிராண்ட் மாஸ்டர் பிரவீன் திப்சே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆடவர் முதல் அணியில் விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹரி கிருஷ்ணா, அர்ஜுன், நாராயணன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோரும், 2வது அணியில்  அதிபன், நிஹல் சரின், குகேஷ்,  பிரக்ஞானந்தா, சத்வனி ரனாக்  ஆகியோரும்  இடம் பெற்றுள்ளனர்.

மகளிர் பிரிவு முதல் அணியில் கொனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி,   தானியா சச்தேவ், குல்கர்னி பக்தி, 2வது அணியில்   சவும்யா சுவாமிநாதன்,  வந்திகா அகர்வால்,  கோம்ஸ் மேரி ஆன், பத்மினி, திவ்யா தேஷ்முக் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணிக்கு முன்னாள் உலக சாம்பியன்  விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்பட உள்ளார். ஆடவர் அணிகளுக்கு ஸ்ரீநாத்,  ஆர்.பி.ரமேஷ் ஆகியோரும்,  மகளிர் அணிகளுக்கு அபிஜித் குண்டே, ஸ்வப்னில் ஆகியோரும் பயிற்சியாளராக  பணியாற்ற உள்ளனர்.

Tags : World ,Indian , World Chess Olympiad Indian Team Announcement
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...