தொடக்க பள்ளி ஆசிரியர்கள் நியமன வழக்கு 12 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குறிஞ்சி மலரோன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்துள்ள மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டி.எம். நடுநிலை பள்ளி மற்றும் பரிக்கலில் உள்ள டி.எம்.தொடக்கப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களாக சேர்ந்தோம். எங்களது பணிக்கு அங்கீகாரம் வழங்க மறுத்து விட்டது. எனவே, எங்கள் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசாணை பிறப்பிக்கப்பட்டதற்கு பின்புதான் அது அமலுக்கு வரும். அரசாணைக்கு முன்பே பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது. எனவே, அரசாணையின் அடிப்படையில் மனுதாரர்களின் கோரிக்கையை பள்ளிக்கல்வி துறை நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகல்வித்துறையின் 2019 அரசாணைக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ள மனுதாரர்களை நியமனம் செய்யக்கோரும் பள்ளியின் கோரிக்கையை 12 வாரங்களில் பள்ளிக்கல்வி துறை பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: