மாவட்டம் தோறும் கனிமவள கடத்தல் தடுப்பு பிரிவு: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

சென்னை:  தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதம்: எம்சாண்ட் குவாரிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றிவிடும் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். லாரிகளில் ஏற்றிவிடும் பாரத்துக்கேற்ப அனுமதிச்சீட்டு மற்றும் அதற்கான ஜிஎஸ்டி ரசீது வழங்க அறிவுறுத்த வேண்டும். மாவட்டந்தோறும் கனிமவளங்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏற்படுத்துவதன் மூலம் வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதை தடுக்க முடியும். கல்குவாரிகளில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட ஆழம் மற்றும் அளவில் மட்டுமே வெட்டி எடுக்கப்பட வேண்டும்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: