×

நாடாளுமன்ற அவையில் விதிமீறல்: ‘செக்ஸ்’ படம் பார்த்த இங்கிலாந்து எம்பி ராஜினாமா

லண்டன்: நாடாளுமன்ற அவையில் செக்ஸ் படம் பார்த்த இங்கிலாந்து எம்பி தனது பதவியை ராஜினாமா செய்தார். இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி நீல் பாரிஷ் (66), சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தனது செல்போனில் 2 முறை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் சக பெண் எம்பிக்கு அருகில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்பி ஊடகத்திடம் தெரியப்படுத்தினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆணையரிடம், தான் ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நீல் பாரிசை கட்சியில் இருந்து நீக்குவதாக கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்தது. இருந்தும் பதவி விலக மறுத்தார். ஆனால் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது குடும்பம், தொகுதி மக்கள் ஆகியோர் என்னால் கோபமடைந்திருப்பதை காணமுடிகிறது. எம்பி பதவியில் தொடரத் தகுதியற்றவன் என்பதையும் உணர்ந்தேன். பைத்தியக்கார செயலை செய்தேன். அந்த தருணத்தில் நான் பித்து பிடித்தவனாய் உணர்ந்தேன். நான் செய்ததை நியாயப்படுத்த போவதில்லை. நான் செய்தது முற்றிலும், முற்றிலும் தவறு என்பதை உணர்கிறேன்’ என்றார்.

Tags : Parliament ,UK , Violation in Parliament: UK MP resigns after watching 'sex' movie
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...