போஜ்புரி நடிகரின் மனைவி மகளுக்கு பலாத்கார மிரட்டல்: காப்பாற்ற கோரி நிதிஷ்குமாரிடம் வேண்டுகோள்

பாட்னா: போஜ்புரி நடிகரின் மனைவி, மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல போஜ்புரி நடிகர் கேசரி லால் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் போலீஸ் டிஜிபி சிங்கால் ஆகியோருக்கு, சமூக வலைதளம் விடுத்துள்ள கோரிக்கையில், ‘என் மனைவி மற்றும் மகளை பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் விடுத்த நபர், காவி உடை அணிந்திருந்தார். அவர் மிக மோசமான வார்த்தைகளால் என்னையும், மனைவி மற்றும் மகளை திட்டினார். பீகார் அரசிடம் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதுபோன்ற விஷமிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் எனது ரசிகர்களுக்காக வாழ்கிறேன்; அவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து ெகாள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘கோய் லக் புரா சாஹே தோ க்யா ஹோதா ஹை’ என்ற பிரபலமான உருது மொழி டயலாக்கையும் அந்த பதிவில் இணைத்துள்ளார். கேசரி லால் யாதவ் வீடியோ புகார் குறித்து பாட்னா காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: