ஹால் டிக்கெட் வழங்க மறுக்க கூடாது: மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் உத்தரவு

சென்னை: கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக ஹால் டிக்கெட் வழங்க மறுக்க கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டார். வருகிற மே 5ம் தேதி மேல்நிலை இரண்டாமாண்டு பொது தேர்வு உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை என மாணவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்தாத காரணத்தினாலோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ ஹால் டிக்கெட் வழங்காமல் இருக்க கூடாது என்று அவர் தெரிவித்தார். ஹால் டிக்கெட் வழங்காமல் இருக்கும் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டார்.

Related Stories: