தின்பண்டம் தருவதாக கூறி 3 சிறுமிகளிடம் அத்துமீறல்: போக்சோவில் முதியவர் கைது

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சி அருகே தட்டாங்குட்டை ராமகவுண்டர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (52). இவர் கடந்த 24ம் தேதி அந்த பகுதியில் 3 சிறுமிகள் விளையாடினர். அப்போது தின்பண்டம் தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அப்போது சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியில் யாரிடமும் சொல்ல கூடாது என மூன்று சிறுமிகளையும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, அவளது பெற்றோரிடம் கூறவே அவர்கள் அவிநாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: