×

மனைவியை கொன்ற கணவன் கைது: அம்பத்தூரில் பயங்கரம்

அம்பத்தூர்: அம்பத்தூரில் மனைவியை கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர், நேரு தெருவில் வசிப்பவர் ஹரிஷ் பிரம்மா (26). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மனைவி ரஷீயா கத்துனா (22). இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு இருந்து வந்திருக்கிறது.

நேற்று மாலையும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஷ் பிரம்மா, மனைவியின் தலையில் ஓங்கி அடித்ததில், மயங்கி விழுந்துள்ளார்.    இதை பார்த்ததும் ஹரிஷ் பிரம்மா தப்பி ஓடிவிட்டார். இதன்பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ரஷீயா கத்துனாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அம்பத்தூர் போலீசார் விரைந்து சென்று ரஷீயா கத்துனாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஷ் பிரம்மாவை கைது செய்தனர்.

Tags : Ambantur , Husband arrested for killing wife: Terror in Ambattur
× RELATED தொடர் பைக் திருட்டு ; 3 பேர் கைது