×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமங்களில் விற்பனையாகும் விவசாய கருவிகள்: ஆர்வமுடன் வாங்கும் விவசாயிகள்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டை தவிர சில ஆண்டுகள் தொடர்ந்து மழையின்றி வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகள் அனைத்தும் முடங்கின. விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறின. இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, களைவெட்டி, அரிவாள், தக்கோல் உருட்டி, கால் நடைகள் கட்டும் மணிகள், கலப்பை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதை விவசாயிகள் கைவிட்டனர். இதனால் இந்த தொழிலில் ஈடுபபட்டவர்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்தனர். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை நடைபெறாமல் இருந்தால் தொடர்ந்து உற்பத்தியை நிறுத்தினர். இந்நிலையில் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ய தொடங்கியது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் தண்ணீர் பெருகி மீண்டும் விவசாயம் செய்ய தொடங்கினர். இன்னும் சில வாரங்களில் அறுவடை செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விவசாயத்திற்கு தேவையான மண்வெட்டி, கலைவெட்டி, வேர் வெட்டி, அரிவாள், கதிர் அறுக்கும் அரிவாள், வைக்கோல் உருட்டி உள்ளிட்ட பொருட்களும் விவசாயிகளின் குடும்பத்திற்கு தேவையான அரிவாள் மனை, கால்நடைகள் கழுத்தில் கட்டும் மணி, சூர் கத்தி, தயிர், பருப்பு கடையும் மத்துகள் உள்ளிட்ட பொருட்களை வேனில் வைத்த கொண்டு பைக்கில் அறிவிப்பு செய்து விற்பனை செய்கின்றனர். இதனை விசாயிகள் வீடுகளுக்கு வந்து விற்பனை செய்வதால் விவசாயிகள் குடும்பத்துடன் பார்த்து பிடித்ததை எடுத்து விலையில் பேரம் பேசி வாங்குகின்றனர். இதனால் இந்த பொருட்களை விற்பனை செய்யும் வியபாரிகளுக்கு விற்பனை அதிகரித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரி கூறியதாவது: கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பொருட்களை வாங்க நகர் பகுதிக்கு வர வேண்டும். இதனை அறிந்து நாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வேனில் ஏற்றி கிராமங்களில் மைக்கில் பிரச்சாரம் செய்து விற்பனை செய்து வருகிறோம். ரூ.50 ல் இருந்து ரூ. ஆயிரத்து 500 வரை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் ஆர்வமாக வந்து அவர்களுககு தேவையான பொருட்களை விலையில் பேரம் பேசி வாங்குகின்றனர். அதிகமாக அறிவாள், மண்வெட்டி, கத்தி உள்ளிட்ட பொருட்கள் விற்பனையாகிறது. வரும் நாட்களில் இந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.



Tags : Pudukkotta , Agricultural implements for sale in villages in Pudukkottai district: Farmers eager to buy
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...