×

கருப்புக்குடிபட்டி பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் மூலம் 5 ஸ்மார்ட் டிவி மற்றும் பள்ளிக்கட்டிடத்திற்கு பெயிண்ட் அடித்து கொடுக்கப்பட்டது. கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் பொன்னழகு, ராமதிலகம், தலைமையாசிரியர் புவியரசு ஆகியோர் பள்ளி மேலாண்மைக்குழு பற்றியும் பள்ளிக்கு உதவி செய்தவர்களை பாராட்டியும் பேசினர்.

வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களை புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த விழாவில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி பள்ளி வளர்ச்சிக்கு 5 ஸ்மார்ட் டிவி வழங்கியுள்ளனர், மகளிர் குழுவினர் பள்ளிக்கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடித்துக்கொடுத்துள்ளனர்.முன்னாள் மாணவர்கள் மற்றும் மகளிர் குழுவினர் ரூ.1 லட்சம் மதிப்பிலான நன்கொடை வழங்கியுள்ளனர்.

Tags : Blackbird School , Assisting alumni of Blackbird School
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்