கும்பகோணத்தில் உள்ள கோயில் தேர்களை ஆய்வு செய்தார் அதிகாரி குமார் ஜெயந்த்

தஞ்சாவூர்: களிமேடு தேர் விபத்தை அடுத்து கும்பகோணத்தில் பல்வேறு கோயில்களின் தேர்களை அதிகாரி குமார் ஜெயந்த் ஆய்வு செய்தார். சாரங்கபாணி கோயில் தேர், ஆதி கும்பேஸ்வரர் கோயில் தேர், நாகேஸ்வரன் கோயில் தேரை ஆய்வு செய்தார். களிமேடு தேர் விபத்து தொடர்பாக காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. விசாரணைக்கு பிறகே அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று குமார் ஜெயந்த் தகவல் அளித்தார்.

Related Stories: