×

தமிழர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பது திமுக; 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர். பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக. 1957-ம் ஆண்டு திமுக முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியது. முதல் தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 1962 தேர்தலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது. 1967-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது திமுக. நெருக்கடி நிலை காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

13 ஆண்டுகளுக்கு பிறகு 1989ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைத்தது. 6வது முறையாக 2021-ல் திமுக ஆட்சியை அமைத்தது. ஆட்சி என்பது சொகுசாக நாம் வாழ்வதற்கான பதவி என்று நினைக்காமல் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொண்டாற்றுகிற கட்சி திமுக. அண்ணா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. கலைஞர் வாதாடி, போராடி செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மக்களுக்கான பாடுபட்ட இயக்கம் திமுக. கலைஞர் 25 வயதிலேயே தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு கட்சிக்காக பணியாற்றினார்.

திமுக தலைவராக அண்ணா பொறுப்பேற்ற போது அவருக்கு வயது 40. நான் 13,14 வயதில் சென்னை கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை தொடங்கி கட்சி பணியை தொடங்கினேன். அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கு தான் வேலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு பணியில் சேருவதற்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பணிக்காக நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை தகுதி தேர்வாகியுள்ளது திமுக. ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்துவதற்கான நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் உள்ள அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.


Tags : K. Stalin , DMK always gives voice to Tamils; DMK has 73 years of history: Chief Minister Stalin's speech
× RELATED மோடி ஆட்சியில் மக்கள் வாழ்வதே...