×

ருதுராஜ் - கான்வே ஜோடி அமர்க்களம் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

புனே: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீசியது. சிஎஸ்கே தொடக்க வீரர்களாக கெயிக்வாட், கான்வே களமிறங்கினர். கெயிக்வாட் 33 பந்தில் அரை சதம் அடிக்க, மறுமுனையில் கான்வே 39 பந்தில் 50 ரன்னை எட்டினார்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் பவுலர்கள் தவித்தனர். சதத்தை நெருங்கிய ருதுராஜ் 99 ரன் (57 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்த நிலையில், நடராஜன் வேகத்தில் புவனேஷ்வரிடம் பிடிபட்டார். ருதுராஜ் - கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17.4 ஓவரில் 182 ரன் சேர்த்து, நடப்பு சீசனில் புதிய சாதனை படைத்தது.

அடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார். சென்னை 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. கான்வே 85 ரன் (55 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் ஷர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் இணைந்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர்.

எனினும், சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து போராடி தோற்றது. நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 64* ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். கானே வில்லியம்சன்(47) ரன், அபிஷேக் சர்மா (39)ரன் எடுத்தனர். சென்னை பந்துவீச்சில் முகேஷ் சவுத்ரி 4 விக்கெட், சான்ட்னர், பிரிடோரியஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சிஎஸ்கே 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Tags : Rudraj ,Conway ,Amarakkalam ,Super Kings , Rudraj, Conway, Super Kings, huge win
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...