மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி எம்.என். எஸ். வெங்கட்ராமன் உயிரிழப்பு!!

விருதுநகர் : மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 65. மறைந்த வெங்கட்ராமனின் உடல்  விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அவர் இறுதி சடங்குகள் அருப்புகோட்டை ரெட்டியபட்டி கிராமத்தில் இன்று மாலை நடக்கும் என தெரிகிறது.

Related Stories: