×

மே தினத்தையொட்டி பொதுக்கூட்டம், கொடியேற்றம்

சென்னை: மே தினக்கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் கட்சி அலுவலகங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சியில் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மே தினத்தை முன்னிட்டு அதிமுக தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ெஜயக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

தமாகா தொழிலாளர் பிரிவு சார்பில் சேப்பாக்கத்தில் மே தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் நலிந்த தொழிலாளர்களின்  குடும்பத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நலத்திட்டங்களை  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.விடியல் சேகர், தலைமை  நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சக்தி வடிவேல், பொதுச்செயலாளர் ராஜம்  எம்.பி.நாதன், தொழிற்சங்க நிர்வாகிகள் கா.இளவரி,  கே.ஜி.ஆர்.மூர்த்தி, கே.எஸ்.ரவிந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மே தினத்தையொட்டி தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியேற்றினார். இதில் தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில், மே தினக் கொடியை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் தென் சென்னை மாவட்டம் வேளச்சேரியில் கொடியேற்றும் விழா நடைந்தது. விழாவிற்கு மாநில பொருளாளர் பி.ஆர்.ராஜேஷ் முன்னிலை வகித்தார். தென் சென்னை மாவட்ட தலைவர் மயிலை கணேஷ் கொடியேற்றினார். இதில் மாநில இணைச்செயலாளர் இமானுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags : Primero de Mayo, reunión pública, izada de bandera
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...