×

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு உதவும் அரசின் தீர்மானத்தை வரவேற்கிறோம்: பாஜ தலைவர் அண்ணாமலை அறிக்கை

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை வாழ் மக்களுக்கு உதவுவதற்காக, இலங்கைக்கு உதவ அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை அனுப்பிவைக்க ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழக மக்களால் வழங்கப்படும் இந்த உதவிகள், பாகுபாடு இன்றி இலங்கை நாட்டிற்கு அளிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, இலங்கைக்கு உதவும் இந்தத் தீர்மானத்தை தமிழக பாஜ வரவேற்றுள்ளது. இந்திய அரசாங்கம், பல தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் எனப் பலரும் இந்த தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கை தேசத்திற்கு உதவ முன் வந்துள்ளனர். தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, இலங்கையைப் பொறுத்தவரையில் சூழலுக்கு ஏற்ப இன்னமும் கூடுதல் உதவிகளை முன்னெடுக்க இந்தியா தயாராகவே இருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக மக்கள் சார்பில் வழங்கப்படும் உதவிகளை, நிலையான நெறிமுறைகளை பின்பற்றி வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்து, இலங்கைக்கு சுமூகமாக உதவிகள் செல்வதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று நம்புகிறோம்.

Tags : Government ,Sri Lanka ,Tamil ,Baja , Asamblea Legislativa de Tamil Nadu, Sri Lanka, líder del BJP Annamalai
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...