எம்பிஏ நுழைவுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட்: அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலை மூலம் நடத்தப்படும் எம்பிஏ, எம்சிஏ, உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் இன்று முதல் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம் பிளான், பட்டப் படிப்புகளில் இந்த  ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அரசாணை 45 வெளியிட்டது.

அதன் பேரில் தற்போது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், எம்பிஏ படிப்பில் சேர 21,557, எம்சிஏ 8,391, எம்இ/எம்டெக்/எம்ஆர்க்/ எம்பிளான் படிப்புக்கு 6,762 என மொத்தம் 36,710 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் //tancet.annauni.edu/tancet என்ற இணைய  தளத்தில் இருந்து இன்று முதல் 13ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொட்ரபாக மேலும் விவரம் வேண்டுவோர்,tancettau@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories: