×

சட்டமன்ற தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: கே.எஸ். அழகிரி பேட்டி

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:
நம்முடைய அனல் மி ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்திற்கு வந்தால் அந்த மாநில அரசாங்கத்தினுடைய உணர்வுகள், அந்த மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை விட அதிக அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் என நினைத்து செயல்பட்டால் தோல்வியில்தான் முடியும். ஆளுநர் என்ன செய்யலாம் என்று சட்டத்தில் இருக்கிறது.

 சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால் அதை நிறுத்தி வைக்கும் உரிமை அவருக்கு கிடையாது. ஜனாதிபதிக்கு, ஒன்றிய அரசுக்கு தான் அனுப்பி வைக்க வேண்டும். ஆளுநர் மரபுகளை, எல்லையை மீறி செயல்படுகிறார். ஒரு சட்டமன்றம் இயற்றிய தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Governor ,K. S.S. Aanakiri , Legislative Resolution, Power, not to the Governor, K.S. அழகிரி
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...