×

கொந்தகை அகழாய்வில் 21 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடி அகழாய்வில், கொந்தகை தளத்தில் இரு குழிகளில் மொத்தம் 21 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த பிப். 13ம் தேதியும், அகரம், கொந்தகையில் மார்ச் 30ம் தேதியும், எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கின. கீழடியில் மொத்தம் 5 குழிகள் தோண்டப்பட்டு நீள்வடிவ தாயக்கட்டை, பாசிமணிகள், வளையல்கள், சேதமடைந்த பானைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அகரத்தில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு சுடுமண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. கொந்தகை தளத்தில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் 12 முதுமக்கள் தாழிகள் இருந்தன. இதில் ஒரு தாழி முழுமையாக மூடியுடன் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிதாக தோண்டப்பட்ட குழியில் 9 முதுமக்கள் தாழிகள் இருந்தன. கொந்தகையில் இதுவரை 21 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவற்றை பாதுகாப்பாக வெளியே எடுக்கும் பணியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களிலும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த இடங்களை திறந்தவெளி அருங்காட்சியகமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பணிகளை தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குநர் அருள்ஜோதி அரசன், சிவகங்கை மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குநர் சிவராமன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.

Tags : Kontagai , Contagion, excavation, elderly miners
× RELATED கொந்தகை முதுமக்கள் தாழியில் இரும்பு...