×

மே 1ம் தேதி விடுமுறை என்பதால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை.!

சென்னை: தமிழகத்தில் 5380 டாஸ்மாக் கடைகள் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.90 முதல் ரூ.100 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறுகிறது. விழா மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். அந்தவகையில், இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் மட்டும் விற்பனை  இருமடங்கு அதிகரித்தது. அதன்படி, சென்னை மண்டலத்தில் ரூ.52.28 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.48.67 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடி என மொத்தம் ரூ.252.34 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது.


Tags : Tamil Nadu ,Tasmak , As May 1st is a holiday, liquor sales for Rs.
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...