×

ஜி.ஹெச்சில் சிகிச்சை பெற்ற வாலிபர் சரமாரி குத்திக் கொலை; திருப்பத்தூரில் இரவில் பயங்கரம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வெட்டுக் காயத்துக்கு தையல் போட்டுக் கொண்டிருந்த வாலிபர் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்டார். திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் முகிலன்(22). இவருக்கும் டிஎம்சி காலனியை சேர்ந்த பிரதாப்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு முகிலன் குடிபோதையில் டிஎம்சி காலனியில் உள்ள கடைக்கு சிகரெட் வாங்கச்சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பிரதாபுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகிலன், பிரதாப், அவரது உறவினர் கவாப் சுரேஷ் ஆகியோரை தாக்கியுள்ளார். பதிலுக்கு பிரதாப், கவாப் சுரேஷ் இருவரும் சேர்ந்து முகிலனை கத்தியால் வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய முகிலன், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயத்துக்கு தையல் போட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே பிரதாப் தாக்கப்பட்டதை அறிந்த நகராட்சி ஊழியரான அவரது அண்ணன் லெப்ட் சுரேஷ்(35), உறவினர்களான கவாப் சுரேஷ், லோகேஷ், தமிழரசன் ஆகியோருடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த முகிலனிடம், ‘ஏன் எனது தம்பியை தாக்கினாய்?’ எனக்கேட்டு லெப்ட் சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். கத்திக்குத்தில் படுகாயமடைந்த முகிலன் அதே இடத்திலேயே இறந்தார். உடனே லெப்ட் சுேரஷ் உள்ளிட்ட 4பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தகலவறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முகிலனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அப்போது அங்கு வந்த முகிலனின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது ெசய்த பின்னர்தான் சடலத்தை எடுக்கவேண்டும் என போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ேமலும் குற்றவாளிகளை கைது செய்ய எஸ்பி பலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


வெளியூர் தப்பிசெல்வதற்காக திருப்பத்தூர் பஸ்நிலையத்தில் பதுங்கியிருந்த லெப்ட் சுரேஷ், கவாப் சுரேஷ் ஆகியோரை அதிகாலை 3 மணியளவில் போலீசார் கைது செய்தனர். போலீசில் லெப்ட் சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், தம்பியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகிலனை கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ள லோகேஷ், தமிழரசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க கலைஞர் நகர், டிஎம்சி காலனி பகுதியில் ஏடிஎஸ்பி குமார் தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளார்.


Tags : GG Waliber Saramari ,Heche ,Thirupathur , Volleyball stabbing death of a young man receiving treatment at GH; Terrible at night in Tirupati
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்