புனேவில் இன்று இரவு பலப்பரீட்சை; 6வது வெற்றி முனைப்பில் ஐதராபாத்.!

புனே: ஐபிஎல்லில் இன்று 2 போட்டி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன. ஐதராபாத் 5 வெற்றி, 3 தோல்விஎன 10 புள்ளியுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்று 6வது வெற்றி பெற்று 2வது இடத்திற்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, ராகுல்திரிபாதி, மார்க்ரம் பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் உம்ரான் மாலிக் (18 விக்கெட்)வேகத்தில் மிரட்டி வருகிறார். டி.நடராஜன், புவனேஸ்வர்குமாரும் வலு சேர்க்கின்றனர். மறுபுறம் நடப்பு சாம்பியன் சென்னை 8 போட்டியில் 2 வெற்றி, 6 தோல்வி என பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

மீதமுள்ள 6 போட்டியிலும் வென்றால் மட்டுமே பிளேஆப் வாய்ப்பு கிடைக்கும் என்ற வாழ்வா,சாவா நிலையில் இன்று களம் இறங்குகிறது. தொடர் தோல்வி காரணமாக ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்ட நிலையில் டோனிமீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். பேட்டிங்கில் அம்பதி ராயுடுவை தவிர உத்தப்பா, கெய்க்வாட், ஷிவம்துபே என யாரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நடப்பு சீசனில் கடந்த 9ம் தேதி மோதிய போட்டியில் ஐதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்க சென்னை போராடும். ஓட்டுமொத்தமாக இரு அணிகளும் 17 போட்டிகளில் மோதியதில் சென்னை 12, ஐதராபாத் 5ல் வென்றுள்ளன.

Related Stories: