×

இந்திய பொருளாதாரம் மீட்சியடைய 12 ஆண்டுகள் ஆகும்: ஆர்.பி.ஐ. ஆய்வுக்குழு அறிக்கை..!

டெல்லி: கொரோனா தொற்று பரவலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரம் மீட்ச்சி அடைய குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் நிதி நிலை குறித்த அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வுக்குழு வெளியிட்டுள்ளது. அதில்; 2020- 21 நிதி ஆண்டில் முதல் காலாண்டில் பொருளாதார மீட்சி ஏற்பட்டது. என்றும் ஆனால் 2021-22 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 2வது அலையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3வது அலையின் போதும் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உக்காரன் ரஷ்யா போராலும் நாட்டின் வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளது என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2020- 21ம் நிதி ஆண்டில் ரூ.19.1 லட்சம் கோடி ரூபாயும், 2021-2ம் நிதி ஆண்டில் ரூ.17 லட்சம் கோடி ரூபாயும் 2022-23ம் நிதி ஆண்டில் 16.4 லட்சம் கோடி என மொத்த 52 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிடுப்பதாக ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு அறிக்கை கூறியிருக்கிறது. இந்த இழப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை வங்கியின் ஆய்வு பிரிவு தயாரித்திருப்பதால் ரிசர்வ் வங்கியின் நேரடி கருத்து அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : RBI , It takes 12 years for Indian economy to recover: RBI Study Group Report ..!
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!