×

மேலூர் அருகே மேற்கூரை உடைந்த நிலையில் சேதமடைந்த விஏஓ அலுவலகம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மேலூர்: மேலூர் அருகே, கீழவளவு ஊராட்சிக்கான விஏஓ அலுவலக கட்டிடம், திருப்பத்தூர் மெயின் ரோட்டில் அரசு பள்ளி அருகே 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஓடுகளால் மேற்கூரை வேயப்பட்ட இக்கட்டிடத்தில் கிரானைட் முறைகேடு தொடர்பான ஏராளமான ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டன. போதிய பராமரிப்பு இல்லாமல் அலுவலக கட்டிடத்தில் மழை காலங்களில் ஓடுகள் வழியாக மழைநீர் கசிந்து ஆவணங்கள் சேதமடைந்தன.

இதையடுத்து தாலுகா அலுவலகத்திற்கு கிரானைட் முறைகேடு ஆவணங்கள் மாற்றப்பட்டன. ஆனால், கீழவளவு தொடர்பான ஆவணங்கள் சேதமடைந்த விஏஓ அலுவலக கட்டிடத்தில்தான் உள்ளது. சேதமடைந்த மேற்கூரை: அலுவலகத்தில் மேற்கூரை ஓடுகள் முற்றிலும் உடைந்து, மழை காலங்களில் தண்ணீரில் கசிகிறது. இக்கட்டிடத்தை சீரமைக்கக்கோரி, பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும், மெயின் ரோட்டில் அலுவலகம் உள்ளதால், கீழவளவு, கொங்கம்பட்டி, இ.மலம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் விஏஓ அலுவலகம் இதே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடம் கட்டியதிலிருந்து 2002ல் மட்டும் புதிதாக தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பிறகு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, விஏஓ அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : VAO ,Malore , VAO office damaged due to broken roof near Melur: Public demand to renovate
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!