கரூர் பசுபதிபாளையம் உயர்மட்ட பாலத்தை சுற்றி ஆக்ரமித்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

கரூர்: கரூர் பசுபதிபாளையம் பகுதியில் உள்ள உயர் மட்ட பாலத்தை சுற்றிலும் ஆக்ரமித்துள்ள சீத்த முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் பசுபதிபாளையம் வழியாக அமராவதி ஆறு திருமுக்கூடலு£ர் நோக்கிச் செல்கிறது. ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.இந்நிலையில், பாலத்தை சுற்றிலும் தற்போது அதிகளவு சீத்த முட்செடிகள் வளர்ந்துள்ளன.

நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக பாதிக்கும் தன்மை இந்த செடிக்கு உள்ளது என்பதால் இதனை முற்றிலும் ஆற்றுப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பசுபதிபாளையம் உயர் மட்ட பாலத்தை சுற்றிலும் அதிகளவு வளர்ந்துள்ள சீத்த முட்செடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: