வடலூர் அயன் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

குறிஞ்சிப்பாடி: வடலூரில் கடலூர் சாலையில் உள்ள அயன் ஏரியை, மீன்வளத்துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக  மீன்கள் செத்து கரையோரம் மிதக்கின்றன. இதனால், அப்பகுதியில்  துர்நாற்றம் வீசி வருவதுடன்,  சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது சனிக்கிழமை வரை சந்தைக்குச் சென்ற பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த சில தினங்களாக செத்து மிதக்கும் மீன்கள் குறித்து வருவாய்த் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட எந்த அரசுத் துறையும் பார்க்க வரவில்லை என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: