×

காங்கயம் நகராட்சியில் மழை சேத பகுதிகளை சீரமைக்கும் பணி தீவிரம்

காங்கயம்: காங்கயத்தில் நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. காற்று வேகமாக வீசியதால் காங்கயம் நகரப்பகுதிகளில் தாராபுரம் சாலை, சேரன் நகர், பாரதியார் நகர், ஆசிரியர் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள், மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் நகரப்பகுதியில் உள்ள பல இடங்களில் மின் தடைபட்டது.  நேற்று காலை காங்கயம் நகர பகுதியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சாலையில் விழுந்த மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் சாய்ந்து கிடைக்கும் மின் கம்பங்களை உடனடியாக சரி செய்து மின் இணைப்பு கிடைக்க துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின்போது  நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.



Tags : Kangayam , Intensity of work to rehabilitate rain-damaged areas in Kangayam municipality
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது