கோத்தகிரியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பறவைக்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோத்தகிரி: கோத்தகிரியில் டானிங்டன் முத்துமாரியம்மன் கோயிலில் 24ம் ஆண்டு வருடாந்திர திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று புதூர் தண்ணீர் பாலத்தில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து டானிங்டன் விநாயகர் கோயிலில் இருந்து பறவைக்காவடி, பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்துதல் நடைபெற்று டானிங்டன் பிரதான வீதி வழியாக ஊர்வலமாக அம்மன் கோயில் வந்தடைந்து.

பின்னர் அன்னதானம், பட்டிமன்றம் நடைபெற்றது. இன்று முலைப்பாறி, மாவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகள் கோயில் கமிட்டியினர், கவுன்சிலர் அமுதம் பாபு, தேவி ஜெகதீஸ்வரன், சிவாக்குமார், பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

Related Stories: