மே தின விடுமுறையால் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

சென்னை: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் 5380 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகள் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.90 முதல் ரூ.100 கோடி வரையில் மதுவிற்பனை நடக்கிறது. விழா மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் மதுவிற்பனை அதிகரித்து காணப்படும்.

அந்தவகையில், இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்தது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் வழங்கப்பட்டன. மாலை நேரங்களில் அதிக அளவிலான கூட்டம் காணப்பட்டது. இதனால், நேற்று மட்டும் ரூ.120 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெற்றிருக்கலாம் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: