அணு உலை அழுத்த கலன் பொருத்தம் கூடங்குளம் 3வது அணு உலையில் அடுத்த ஆண்டு மின் உற்பத்தி: இந்திய அணுசக்தி கழகம் திட்டம்

நெல்லை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளின் மூலம் மின்உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 3, 4வது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கடந்த ஜூன் 2017ம் ஆண்டு 3வது  அணு உலைக்கான முதல் கான்கிரீட் போடும் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் ரூ.39 ஆயிரத்து 747 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3, 4வது அணு உலைகள் அமைக்கப்படுகிறது.   

3வது அணு உலையில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக அணு உலையின் வெளிப்புற கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ‘‘அணு உலை அழுத்த கலன்’ நிறுவும் நிகழ்ச்சி, கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இந்திய அணுசக்தி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புவன் சந்திர பதக் தலைமையில் ராட்சத கிரேன்கள் மூலம் ‘‘அணு உலை அழுத்த கலன்’ கான்கிரீட் சுவர் கொண்ட கட்டுமானப் பகுதிக்குள் வெற்றிகரமாக நிறுவப்பட்

டது. இதைத் தொடர்ந்து இந்திய அணுசக்தி கழக அதிகாரிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 3வது அணு உலை மூலம் வருகிற 2023 மார்ச்சில் மின் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 332 டன் எடை: அணு உலை அழுத்த கலன் 332 டன் எடை கொண்டது. அணுக் கதிர்வீச்சை வெளியே விடாமல் தாங்கும் தன்மை கொண்டது.

Related Stories: