×

பாகிஸ்தானில் மீண்டும் தலை துாக்கும் போலியோ: ஒரே ஊரில் 2 குழந்தைகள் பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பல ஆண்டுகளுக்கு பிறகு போலியோ நோய் மீண்டும் தலைதுாக்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது. போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளை தாக்குகிறது. இந்த நோயை ஏற்படுத்தும் போலியோ வைரஸ், சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டால் உருவாகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, கடந்த   1988ம் ஆண்டு 3,50,000 ஆக இருந்த போலியோ நோயாளிகள் எண்ணிக்கை, சில ஆண்டுகளுக்கு முன் 99% க்கும் கீழாக குறைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே தற்போது போலியோ பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 2 வயது குழந்தைக்கு போலியோ பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் அதே மாகாணத்தை சேர்ந்த 15 மாத குழந்தையையும் இந்த நோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்ப்பட்டது.  மீர் அலி என்ற இடத்தை சேர்ந்த இந்த இரு குழந்தைகளையும் டைப் 1 போலியோ தாக்கி உள்ளது. இதனால்  மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : Pakistan , Pakistan, polio, child vulnerability
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி