சிஎஸ்கே அணிக்கு தோனி மீண்டும் கேப்டன்

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் ரவுண்டர் ஜடேஜா தலைமையில் விளையாடிய 8 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், எம்.எஸ்.தோனியே மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்த வேண்டும் என்று ஜடேஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு வீரராக சிறப்பாக செயல்படவும், அணியின் வெற்றிக்கு உதவும் வகையிலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை ஏற்று, எஞ்சியுள்ள லீக் ஆட்டங்களில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, புனே எம்சிஏ ஸ்டேடியத்தில் இன்று இரவு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் தோனி மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

Related Stories: