×

9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் வெயில் கொதித்துக்கொண்டிருக்கும் சூழலில் பள்ளிகளை மே 13-ம் தேதி வரை நடத்த வேண்டிய தேவை என்ன?
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் மின் விசிறிகள் இல்லை. 3 வயது குழந்தைகளால் 8 மணி நேரம் எவ்வாறு அடைந்து கிடக்க முடியும். 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் மே 5ம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நடத்தப்படவுள்ளன. அதில் கூட நியாயம் உள்ளது. ஆனால், 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் போது காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயம் என்ன? குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமை அதிகாரிகளுக்கு புரிவதில்லை.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளின் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாணவர்கள் நலன் கருதி 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்; அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல், கல்லூரிகளுக்கும் குறைந்தபட்சம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramadas , All pass, Ramadas,
× RELATED தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்...