×

பாதிப்பு 196 ஆக அதிகரிப்பு சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 13  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 19, 20ம் தேதி விடுதியில் தங்கி படிக்கும் சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஐஐடியில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என 7,490 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர்களுக்கு பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. தினமும் குழு குழுவாக தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 11 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் மேலும் 13 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதன்மூலம், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 196  ஆக உயர்ந்துள்ளது.ஐஐடியில் தொற்று  பாதித்தோரின் எண்ணிக்கை 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை ஐஐடியில் 33  பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளதாகவும் நேற்று 22 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளதாகவும் 149 பேர் தொடர்ந்து மருத்துவர்களின் சிகிச்சையில்  இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Health Department , Corona vulnerability, Chennai IIT, Health Information
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...